இரண்சோட்ராய்

தக்கோர் என்னும் டங்காபுரத்தில் கோயில் கொண்டு இருப்பவர் துவாரகையில் உள்ள கண்ணனே ஆவார். இது எப்படி? கண்ணன் மீது பக்தி கொண்ட விஜயசிம்மன் என்பவரும் அவர் மனைவி கங்காபாய் என்பவரும் துவாரகையில் ராமபக்தர் என்று அழைக்கப்பட்ட அவர் ஆண்டுக்கொரு முறை துவாரகை சென்று கண்ணனைத் தொழத் தவறமாட்டார். விஜயசிம்மர் எண்பது வயது ஆன போதிலும் அந்நியமத்தை விடவில்லை.

அவருடைய கனவில் தோன்றி துவாரகநாதன் தன்னை அழைத்துச் செல்லக் கூறினார். இரவில் விஜயசிம்மன் துவாரகை சென்றபோது கருவறைத் திறந்தது. அவர் கண்ணனை எடுத்துக் கொண்டு டங்காபுரம் சென்றார். தம் வீட்டிலேயே எழுந்தருளச் செய்தார்.

துவாரகனாதனிடம் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை அவர் கூறத் தம்மைப் புஷ்கரணியில் போட்டுவிட்டு அங்கு வரும் வீரர்களுடன் வைகுண்டம் வரச் செய்தார் துவாரகநாதன். ஆனால் விஜயசிம்மரைத் துவாரகை வீரர்கள் குத்திக் கொன்றனர். விஜயசிம்மரின் மனைவி தம் கணவருக்கு ஈமக்கடன் செய்தாள். புஷ்கரணியில் போடப்பட்ட துவாரகநாதன் வெளியே கிளம்ப மறுத்தார். விஜயசிம்மரின் மனைவி கங்காபாயே வெளிக் கொணர்ந்தார்.

வெளி வந்த துவாரகைநாதனைப் பார்த்தால், அவர் திருமேனி எல்லாம் இரத்தக் காயமாக இருந்தது. விஜயசிம்மரைக் குத்திய காயங்கள் எல்லாம் துவாரகைநாதன் உடம்பில் இருந்தன. துவாரகைநாதனின் எடைக்குத் தங்கம் தரச் சொல்லி எல்லோரும் கங்காபாயை வற்புறத்த, மூக்குத்தியைத் தவிர வேறு எதுவுமில்லாமல் போனதால் துலாக்கோலின் ஒருதட்டில் மூக்குத்தியை வைத்து மற்றறொரு தட்டில் துவாரகைநாதனை வைக்க, மூக்குத்தி தட்டு உயர்ந்த்தது. எல்லோரும் பெருமாளை வேண்டினர். இதனால் ஒரு நாளில் ஐந்து நாழிகை மட்டும் துவாரகையில் இருப்பேன், மற்ற நேரமெல்லாம் டங்காபுரத்தில் இருப்பேன் என்றார்.
இதனால் அவருக்கு இரண்சோட்ராய் என்ற பெயர் ஏற்பட்டது.

Leave a comment